Monday, June 10, 2013

உலகில் ஏழல்ல அதிசயங்கள்....


உலகில் ஏழல்ல அதிசயங்கள்....


நமக்கு அதிசயம்னு தெரிஞ்சதெல்லாம், தாஜ்மஹாலும், சீனப் பெருஞ்சுவரும் தான். ஆனா, அதையும் தாண்டி இயற்கை பல் அதிசயங்களை நமக்காக செய்து வைத்திருக்கிறது. ஒவ்வொன்றும் ஒன்றை ஒன்று மிஞ்சும் கலை வண்ணங்கள். எப்படி இதெல்லாம் சாத்தியம் என ஆச்சர்யத்தில் நம் விழிகளும் விக்கித்துத் தான் போகின்றன. இவற்றை நேரில் பார்க்க எத்தனைப் பேருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ...ஆனால், இங்கே, உங்களுக்காக ...


சஹாரா கண்... 

மொரீஷியானா பாலைவனத்தில் காணப்படும் 25 மைல் அகலமான பள்ளம் ஒன்று வானமார்க்கமாக பார்க்கும்போது கண் போன்று தோன்றுவதால், சஹாரா கண் என்ற பெயர் அதற்கு வந்தது.


ஸ்பாட்டட் லேக்... 

கொலம்பியாவில் உள்ள ஸ்பாட்டட் ஏரியில், கோடையில் முக்கால்வாசி தண்ணீர் ஆவியாகி விடுமாம்.இதனால் ஏரியில் உள்ள உப்பு, கால்சியம் போன்ற தாதுக்கள் மட்டும் உள்ளேயே தங்கி விடுமாம். இதன் காரணமாக, நல்ல சீசன் காலத்தில், ஏரித்தண்ணீரில் மின்னலாய் காணப்படும் புள்ளிகளாலேயே ஏரிக்கு ஸ்பாட்டட் ஏரி என்று பெயர்.


ரத்த நீரூற்று... 

அண்டார்டிகாவில் உள்ள டேலாய் பனிப்பாறையில் இருந்து ரத்தநிற தண்ணீர் வழிந்த வண்ணமே இருக்குமாம். தண்ணீரில் இருக்கும் அதிகப்படியான இரும்புத்தாதே இந்த தண்ணீரின் நிற மாற்றத்திற்குக் காரணமாம்.


நகர்ந்த கற்கள்... 

150 பவுண்ட் எடை கொண்ட சில அதிசய கற்கள் 700 அடி வரை நகர்ந்ததற்கான அடையாளங்கள் மண்ணில் காணப்படுகின்றன். ஆனால், சத்தியமாக பலர் சேர்ந்து நகர்த்துவது கூட சாத்தியமில்லாததே. இந்தப் பாறைகள் அமெரிக்காவில் காணப்படுகின்றன.


ரெட்பா ஏரி... 

பிங்க் கலரில் உள்ள ஏரி நீரில் வளரும் ஒரு வகை காளான்களால் இந்த தண்ணீர் பிங் கலரில் காணப் படுகிறது.


மார்பிள் டிசைன் குகை.... 

இயற்கையாகவே, யாரோ வண்ணங்கள் கொண்டு விளையாடியது போன்ற குகை ஒன்று சிலியில் அமைந்துள்ளது.குகாஇயின் அடிப்பாகத்தில் ஓடும் பச்சை மற்றும் நீல வண்ண ஏரிகளின் பிரதிபலிப்பாலேயே இந்தக் குகை இவ்வாறு விநோதமாக காட்சி அளிக்கிறதாம்.


பனி சிலைகள்... 

அண்டார்ட்டிகா பனியால் ஆன கண்டம் என்பது தானே நமக்குத் தெரியும். ஆனால், அது பனிச் சிற்பங்களின் கலைக்கூடம். ஏறக்குறைய ஒவ்வொரு சிலையும் 60 அடி உயரம் வரை உள்ளன. பனி மென்மேலும் படிவதால், சிலைகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த வண்ணமாக உள்ளன.


குழிப் பனியாரங்கள்... 

வெனிசுலாவில் காணப்படும் சரிசரிநாமா மலையில் சுமார் ஆயிரம் அடி ஆழம் வரை கொண்ட திடீர்க்குழிகள் 1961ம் ஆண்டுவாக்கில் கண்டறியப்பட்டன.


மல... மல.. சாக்லெட் மல 

பிலிப்பைன்சில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான சாக்லெட் மலைகள் காணப்படுகின்றன. 700 அடி உயரத்தில் பார்ப்பதற்கு சாக்லெட் போன்று தோற்றமளிப்பதாலேயே இவற்றிற்கு இந்தப் பெயர். மற்றப்படி சாக்லெட் மலை இனிப்பாக இருக்கும் என்றெல்லாம் எண்ணி நீங்கள் ஏமாந்து போனால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல...

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!