ரஷ்யாவில் பூனை கைது! தூக்கு தண்டணை விதிக்கப்படலாம்!
உலகத்துல யார் யாரயோலாம் கைது பண்றாங்க, ஆனா இங்க ஒரு பூனையை அரஸ்ட் பண்ணி ரஷ்யா போலீஸ் ஒரு மிகப்பெரும் சாதனையை செஞ்சிருக்காங்க. ஆம், ரஷ்யாவின் சிறை ஒன்றுக்குள் செல்போனை கடத்திச் சென்ற பூனை கைது செய்யப்பட்டுள்ளது.
பூனை கைதிகளிடம் வேவு பார்த்து செல்போன், பேட்டரிகளை எடுத்து சென்று தந்த குற்றத்திற்காக இந்த திருட்டு பூனை கைது செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கோமி மாகாணத்தில் உள்ள ஸ்கைடிவ்கார் அருகே உள்ள சிறைக்கு பூனை ஒன்று அடிக்கடி சென்று வந்துள்ளது.
சிறை காவலர்கள் அதன் மீது சந்தேகப்பட்டு பிடித்து பார்த்தனர். அப்போது தான் அதன் வயிற்றுப் பகுதியில் செல்போன்கள் மற்றும் சார்ஜர்கள் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அந்த பூனையை கைது செய்தனர். சிறைக்குள் மேலும் என்னென்ன பொருட்கள் கடத்தி வரப்பட்டன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் பிரேசில் நாட்டு சிறை ஒன்றுக்குள் சென்ற பூனையின் உடம்பில் செல்போன், பேட்டரிகள், பிளேடுகள் உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!