உலகிலேயே சத்தமாக குரைத்து கின்னஸில் இடம்பிடித்த நாய்
அவுஸ்திரேலியாவில் அடிலெய்டு நகரில் வசித்து வருகின்ற பெலின்டா ப்ரீபெய்ன் என்பவரின் நாய், அதிக சத்தத்துடன் குரைத்து கின்னஸில் இடம் பெற்றுள்ளது.
இது கோல்டன் ரீட் ரைவர் வகையைச் சேர்ந்தது. இதற்கு சார்லி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
உலக சாதனை அகாடமி நடத்திய அதிக சத்தத்துடன் குரைக்கும் நாய் போட்டியில், சார்லி கலந்து கொண்டு 113 டெசிபல் சத்தத்துடன் குரைத்து வெற்றி பெற்றுள்ளது.
இது, ராக் இசை நிகழ்ச்சி மற்றும் இரும்பு ஆலையின் சத்தத்தை விட அதிகம். மேலும் உலகிலேயே அதிக சத்தத்துடன் குரைக்கும் நாய் என்ற கின்னஸ் சாதனையும் சார்லி படைத்துள்ளது.
லண்டன் நகரில் உள்ள ஜேர்மன் ஷெப்பர்டு வகை நாய் கடந்த 2009ம் ஆண்டு 108 டெசிபல் அளவுக்கு சத்தமாக குரைத்தது. அந்த சாதனையை சார்லி முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!