Tuesday, April 30, 2013

செயற்கை கருத்தரிப்பு மூலம் 14 வயது மகள் கட்டாய கர்ப்பம்: தாய்க்கு 5 ஆண்டு சிறை

செயற்கை கருத்தரிப்பு மூலம் 14 வயது மகள் கட்டாய கர்ப்பம்: தாய்க்கு 5 ஆண்டு சிறை



நான்காவது குழந்தைக்காக தனது மூத்த மகளின் கர்ப்பப்பைக்குள் கட்டாயமாக விந்தணுவை செலுத்தி, செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்த தாய்க்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை விவாகரத்து செய்து விட்டு இங்கிலாந்தில் குடியேறினார். அங்கு 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தார். மேலும், ஒரு குழந்தைக்கு ஆசைப்பட்டார். ஆனால், அது தனது குடும்பத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும் என எண்ணினார். அதற்காக அவர் விபரீத முயற்சியில் இறங்கினார்.

இதற்காக தேவையான விந்தணுவை டென்மார்க்கில் உள்ள ஒரு நிறுவணம் மூலம் இண்டர்நெட்டில் ஆர்டர் செய்து பெற்றுள்ளார் அப்பெண். பின் தனது தத்து குழந்தைகளில் மூத்தவளான 14 வயது மகளை இதற்காகத் தேர்ந்தெடுத்தார்.

அதற்காக தனது 14 வயது மகளின் கர்ப்ப பைக்குள் தானமாக பெறப்பட்ட விந்தணுவை கட்டாயப்படுத்தி செலுத்தினார். இதனால் செயற்கை முறையில் அப்பெண்ணை கருத்தரிக்க செய்தார்.

இது குறித்து அச்சிறுமி கூறுகையில், இதன் மூலம் என் அம்மா என்னை மேலும் அதிகமாக நேசிப்பார் என்பதால் இதற்கு நான் சம்மதித்தேன். தான் விரும்பியதை அடைய எதையும் செய்யும் மனப்போக்கு அவருக்கு உண்டு என்று தெரிவித்துள்ளார்.

ஒரு சிறுமியை கட்டாயப்படுத்தி கர்ப்பிணி ஆக்கியது மிகப்பெரிய குற்றமாகும். எனவே, அந்த சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பீட்டர் ஜாக்சன் குற்றம் சாட்டப்பட்ட அந்த தாய்க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!