இன்று வானில் நிகழப்போகும் அற்புதம்
இன்று சூரியனுக்கும், பூமிக்கும் இடையே வெள்ளி கிரகம் கடந்து செல்கிறது. இதனால் சூரியனின் மேல் வெள்ளி கிரகம் ஒரு புள்ளி போல் நகர்ந்து செல்லும்.
வெள்ளி கிரகம் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஆய்வில் இக்கிரகம் பூமி மற்றும் சூரியனை கடக்க நெருங்கி வருவது தெரிய வந்தது.
எனவே இதுகுறித்து தீவிரமாக ஆய்வு மேற்கொண்டதில், நேற்று அல்லது இன்று வெள்ளி, பூமி மற்றும் சூரியனை கடக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
வெள்ளி கிரகம் கடந்து செல்வதை மேற்கு பசிபிக், கிழக்கு ஆசியா, மேற்கு அவுஸ்திரேலியா மற்றும் வடதுருவத்தில் உள்ள நாடுகளில் முழுமையாக காணமுடியும்.

அமெரிக்காவை பொறுத்தவரை ஜூன் 5ஆம் திகதி மாலையில் இக்கிரகம் கடக்கும். ஐரோப்பிய நாடுகளில் 6ஆம் திகதி காலை வெள்ளி கிரகம் கடப்பதை பார்க்க முடியும்.
அடுத்ததாக இச்சம்பவம் 2117-ம் ஆண்டு நடைபெறும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
அடுத்ததாக இச்சம்பவம் 2117-ம் ஆண்டு நடைபெறும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
இந்த காட்சியை சூரிய உதயம் முதல் காலை 10 மணி வரை காணலாம். இந்நிகழ்வை வெறும் கண்ணால் பார்க்க கூடாது. பார்த்தால் சூரிய ஒளியால் கண்ணில் பாதிப்பு ஏற்படும்.இதனை பார்ப்பதற்கு சூரிய ஒளியை சிறு கண்ணாடி மூலம் பிரதிபலித்து வெள்ளைச் சுவரில் பிடித்தால், சூரியன் சுவரில் பளிச்சென்று விழும். அதில் கரும் புள்ளியாய் வெள்ளி நகருவது தெரியும்.இதனால் பூமிக்கும், ஏனைய உயிரினங்களுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
PLS Note : If viewed directly, permanent eye damage could result.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!