வெயில் கொடுமைக்கு ஆந்திராவில் 148 பேர் பலி ஒரேநாளில் பரிதாபம்
ஆந்திர மாநிலம் முழுவதும் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் வெயில் கொடுமைக்கு 148 பேர் பலியாகி உள்ளனர். இந்த ஆண்டு கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகமாக பதிவாகி பொதுமக்களை வாட்டி எடுத்துவருகிறது. வெயிலின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த மாதம் 4ம் தேதி தொடங்கி 28ம் தேதி முடிவடைந்தது. அக்னி நட்சத்திரம் முடிந்தால் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து சுட்டெரித்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில் கத்திரி முடிந்தும் நேற்றுமுன்தினம் கோடை வெயிலால் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 110 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதில் காக்கிநாடா, துணி ஆகிய மண்டலங்களில் 36 பேர் பலியாகினர் விசாகபட்டினத் தில் 108 டிகிரி கொளுத்திய வெயிலில் 31 பேரும், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 108 டிகிரி வெயிலுக்கு 21 பேரும், கம்மம் மாவட்டத்தில் 106 டிகிரிக்கு 13 பேரும், கிருஷ்ணா மாவட்டத்தில் 11 பேரும், வாரங்கல் 11 பேரும், விஜயநகரத்தில் 9 பேரும், ஸ்ரீகாகுளம், கரீம்நகர் மாவட்டங்களில் தலா 6 பேரும், குண்டூர் மாவட்டத்தில் 6 பேரும், சித்தூர் மாவட்டத்தில் 2 பேர் உட்பட மாநிலம் முழுவதும் 148 பேர் பலியாகி உள்ளனர். அந்தந்த மாவட்ட தலைநகரங்கள் வெளியிட்டுள்ள தகவல்படி இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!