Tuesday, October 29, 2013

நாளை இன்போசிஸ் மீது அமெரிக்காவினால் விதிக்கப்படவுள்ள ரூ. 215 கோடி ருபா அபராதம் !!!!!

வுிசா முறைகேடு... இன்போசிஸ் மீது ரூ. 215 கோடி அபராதம் விதிக்கும் அமெரிக்கா! 


சட்டவிரோதமாக விசாக்களைப் பயன்படுத்தியது தொடர்பாக இன்போசிஸ் நிறுவனம் மீது அமெரிக்க அரசு, 3.5 கோடி டாலர் அபராதத் தொகையை விதிக்கவுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் இது ரூ. 215.32 கோடியாகும். 

ஒரு நிறுவனம் மீது அமெரிக்கா விதிக்கும் வரலாறு காணாத அபாரதத் தொகையாகும் இது என்பதால் பரபரப்பு நிலவுகிறது. 

இதுவரை அமெரிக்காவில் எந்த ஒரு நிறுவனத்திற்கும் இப்படி ஒரு அபராதத் தொகையை அமெரிக்க அரசு விதித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏன் இந்த அபராதம் 

இன்போசிஸ் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள தனது மற்றும் தான் சார்ந்த நிறுவனங்களில் ஊழியர்களை பணிக்கு அமர்த்தியபோது ஒர்க் விசாவுக்குப் பதில் விசிட்டர் விசாவை பெருமளவில் பயன்படுத்தியதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டியுள்ளது. இது முறைகேடானது என்பது அமெரிக்காவின் வாதமாகும்.

நாளை அபராதம் விதிக்கப்படும் 

இன்போசிஸ் மீதான அபராத உத்தரவு நாளை பிறப்பிக்கப்படும் என்று தெரிகிறது.

எச்1பிக்குப் பதில் பி 1 

குறுகிய கால வர்த்தகப் பயணத்திற்காக அமெரிக்க அரசு பி 1 விசாவை வழங்குகிறது. இது ஒர்க் விசா அல்ல. அமெரிக்காவில் பணியாற்ற வேண்டுமானால், வெளிநாட்டினர் எச்1 பி விசாவைத்தான் பெற வேண்டும். ஆனால் இன்போசிஸ் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு பி 1 விசாவைப் பெற்று அங்கு அனுப்பி பணிகளைச் செய்ய வைத்துள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.

பெருமளவிலான ஊழியர்கள் 

இப்படி முறைகேடாக விசாவைப் பயன்படுத்தி பல ஊழியர்களை சட்டவிரோதமாக நீண்ட காலம் தங்க வைத்து பணியில் அமர்த்தியதாகவும் இன்போசிஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கர்களின் வேலையைப் பறித்து விட்டனராம் 

இதுதொடர்பாக விசாரணை நடத்திய விசாரணைக் குழுவினர், இன்போசிஸ் நிறுவனத்தின் செயலால், நல்ல தகுதியும், திறமையும் இருந்தும் அமெரிக்கர்களுக்கு வேலையிழப்பை ஏற்படுத்தியுள்ளது இன்போசிஸ். மேலும் அமெரிக்கர்களுக்கு அதிக சம்பளம் தர வேண்டும் என்பதற்காக, குறைந்த ஊதியத்தைப் பெறும் இந்தியர்களுக்கு தனது வேலைகளை இப்படி முறைகேடாக விசாக்களைப் பயன்படுத்தி அது செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளதாம்.

இன்போசிஸ் விளக்கம் 

இந்த விவகாரம் குறித்து இன்போசிஸ் வெளியிட்டுள்ள இமெயில் செய்தியில், இதுதொடர்பாக தங்களது அமெரிக்க வழக்கறிஞர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!