இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிகள்!!!
இந்த உலகத்தில் அனைவரும் உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம். இதில் சிலரின் வருமானத்தைக் கொண்டு, மாத செலவுகளை சமாலிக்கவே தலை சுற்றுகிறது. ஆனால் பெரிய பதவி வகிக்கும் சிலரின் வருமானம் கேட்டாலே நமக்கு தலை சுற்றுகிறது.
அப்படிபட்டவர்கள் நம் நாட்டிலும் இருக்கிறார்கள், இவர்களை பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம், ஆனால் இவர்களின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா பாஸ் உங்களுக்கு?
நவீன் ஜின்டல்
இவர் ஜின்டல் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனத்தின் தலைவர் ஆவார். இந்நிறுவனம் 17 பில்லியன் டாலர் மதிப்புடைய ஒ.பி ஜின்டல் குழுமத்தின் ஒரு பகுதி. மேலும் இவர் குருஷேத்ரா மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். நவீன் ஜின்டல் டெல்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் காமர்ஸ் பட்டப்படிப்பை முடித்து, 1992 ஆம் ஆண்டு டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து எம்பிஏ பட்டமும் பெற்றார். இவர் தான் இந்தியாவிலேயே மிக அதிகமான ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரி, இவரின் ஆண்டு வருமானம் சுமார் 14.68 மில்லியன் டாலராகும்.கலாநிதி மாறன்
இவர் இந்தியவின் ஊடக அரசன் என்று அழைக்கப்படுவார். இவர் சன் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். கலாநிதி மாறன் தனது பள்ளி படிப்பை சென்னையில் தான் முடித்தார், பின்பு ஸ்க்ராண்டன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார்.சன் குழுமம் ஏசியாவின் முன்னணி ஊடக நிறுவனம் ஆகும், மேலும் இவர் ஐபிஎல் ஹைதெராபாத் சன்ரெய்சர்ஸ் அணியின் உரிமையாளர். இவரின் சம்பளம் ஆண்டுக்கு 11.4 மில்லியன் டாலர். மேலும் இவரின் மனைவி காவேரி காலநிதி இரண்டாம் இடத்தை பகிர்ந்துள்ளர் இவரின் சம்பளம் ஆண்டுக்கு 11.4 மில்லியன் டாலர் ஆகும்.
குமார் மங்கலம் பிர்லா
இவர் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் ஆவார், இந்தியாவின் மதிப்புக்குரிய தொழிலதிபர்களில் இவர் முக்கிய இடத்தை வகுக்கிறார். மும்பை பல்கலைக்கழகத்தில் காமர்ஸ் பட்டப்படிப்பை முடித்து, லண்டன் பிஸ்னஸ் ஸ்கூலில் எம்பிஏ முடித்தார். தனது தந்தை மரணத்தினால், 28ஆம் வயதில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் பதவியை ஏற்றார். இவரது சம்பளம் ஆண்டிற்கு 9.42 மில்லியன் டாலர் ஆகும்.பவன் காந்த் முஞ்சால்
இவர் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். மேலும் இவர் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸ்னஸின் நிர்வாக குழு உறுப்பினராக இருக்கிறார். மெக்கானிக்கல் என்ஜினியரிங் பட்டம் பெற்றவர். இவர் 1986 ஆம் ஆண்டில் இருந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியாக பதவி வகுக்கிறார். இவரின் சம்பளம் ஆண்டிற்கு 6.89 மில்லியன் டாலர் ஆகும்.பிரிஜ்மோகன் லால் முஞ்சால்
பிரிஜ்மோகன் லால் முஞ்சால், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிறுவனர். இவர் மார்ச் 2005 ஆம் ஆண்டில் இந்திய மோட்டார் துறையில் செய்த சிறந்த பணிகளுக்காக "பத்ம பூஷன்" வருது பெற்றார். மேலும் இவர் தலைசிறந்த தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) பிஸ்னஸ் பேரான்ஸ் என்ற பத்திரிகை அறிவித்தது. இவரின் சம்பளம் ஆண்டிற்கு 6.88 மில்லியன் டாலர்.பி.ஆர். சுப்ரமனிய ராஜா
இவர் மெட்ராஸ் சிமெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். இவர் 20 நிறுவனங்களின் நிர்வாக குழு உறுப்பினர் ஆவார். இவருக்கு 81 வயது ஆன நிலையிலும் தனது பணிகளை செம்மையாக செய்கிறார். இந்த வயதான இளைஞரின் ஆண்டு வருமானம் 5.86 மில்லியன் டாலர் ஆகும்.பி.ஜி. ரகுபதி பி.ஜி. ரகுபதி,
பிஜிஆர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் ஆவார். இவர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பட்டம் பெற்றவர். இந்நிறுவனம் 1985 ஆம் ஆண்டு ஜெர்மனி நிறுவனத்துடன் இனைந்து துவங்கப்பட்டது. பி.ஜி. ரகுபதி, பிஜிஆர் நிறுவனத்தின் மார்க்கெட்டிங், விற்பனை மற்றும் நிர்வாகம் துறையில் சிறந்த முறையில் நிர்வாகம் செய்தார். இவரது ஆண்டு வருமானம் 5.19 மில்லியன் டாலர் ஆகும்.சஜ்ஜன் ஜின்டல்
இவர் ஜின்டல் ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். இந்தியாவில் ஸ்டீல் உற்பத்தியில் முன்றாம் இடத்தில் உள்ளது. இவர் அஸ்ஸோசாம் நிறுநவனத்தின் முன்னால் தலைவர் ஆவார். இவரின் ஆண்டு வருமானம் 5.06 மில்லியன் டாலர் ஆகும்.முரளி. கே டெவி டாக்டர். டெவி,
டெவிஸ் நிறுவனத்தின் தலைவர் ஆவார். இவர் ககாதியா பல்கலைக்கழகத்தில் மருந்து அறிவியல் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றவர். டெவிஸ் நிறுவனத்தில் ஜெனரிக்குகள், கரோட்டினாய்டுகள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவரின் ஆண்டு வருமானம் 4.63 மில்லியன் டாலர் ஆகும்.சுனில் பார்தி மிட்டல்
இவர் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் ஆவார். இந்நிறுவனத்தின் விற்றுமுதல் மட்டும் 8.3 பில்லியன் டாலர் ஆகும். இவர் 2007 ஆம் ஆண்டில் இந்திய வணிக துறையில் செய்த சிறந்த பணிகளுக்காக "பத்ம பூஷன்" வருது பெற்றார். இவரின் ஆண்டு வருமானம் மட்டும் 4.25 மில்லியன் டாலர் ஆகும்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!