அது ஏன் கொசு ராத்திரி மட்டும் கடிக்குது தெரியுமா...!
கொசுக்கடியை தாங்கும் மனோ திடம் மற்றும் உடல் வலுவுடன்தான் வர வேண்டும். அப்படி ஒரு கொசுக்கடி இங்கு.. இங்கு மட்டுமல்ல எங்கு போனாலும் இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை. அதுவும் ராத்திரியில்தான் ஓவராக கடிக்கின்றன.
ஏன் இந்த கொசுக்கள் ராத்திரியில் மட்டும் ஓவராக கடிக்கின்றன என்று பார்த்தால், அதற்கு அறிவியல்பூர்வமாக ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். பகலை விட ராத்திரியில் கொசுக்கள் அதிகம் கடிக்க, அல்ட்ரா வயலட் அதாவது புற ஊதாக் கதிர்கள்தான் காரணமாம்.
பகலை விட இரவு, சூரிய உதயத்திற்கு முன்பு மற்றும் அந்தி சாயும் நேரங்களில் இந்த புற ஊதாக்கதிர் வீச்சு அதிகம் இருக்கும். அவைதான் கொசுக்கள் படு ஆக்டிவாக இருக்கும் நேரமும் ஆகுமாம்.
அதிகாலையில்.. அந்தி சாயும் நேரத்தில்
கொசுக்களுக்கு ரொம்பப் பிடித்த நேரம் இந்த அதிகாலையும், அந்தி சாயும் நேரமும்தானாம். இடையில் அவை அதி தீவிரமாக செயல்படுவதில்லையாம்.
ரொம்ப சூடும் ஆகாது.. ரொம்ப குளிரும் ஆகாது
கொசுக்களுக்கு அதீத சூடும், அதீத குளிரும் ஆகவே ஆகாதாம். மேலும் வறட்சியான சூழலையும் கொசுக்கள் வெறுக்கின்றனவாம்.
லைட்டும் ஆகாது
அதேபோல அதிக வெளிச்சமும் கொசுக்களுக்கு ஆகாதாம். பலமாக வீசும் குளிர்காற்றும் கூட கொசுக்களுக்குப் பிடிக்காத விஷயம்.
கார்பன் டை ஆக்சைடு அதிகம் இருந்தால்
கார்பன் டை ஆக்சைடும் கூட கொசுக்களின் சுறுசுறுப்புக்கு இன்னொரு காரணம். அதன் அடர்த்தி அதிகம் இருந்தால் கொசுக்களுக்கு ரொம்பப் பிடிக்குமாம்.
புற ஊதாக் கதிர்கள் ஓ.கே.
கொசுக்களுக்கு புற ஊதாக் கதிர்கள் என்றால் ரொம்ப இஷ்டமாம். அதுபோன்ற சமயங்களில்தான் அவை மிகவும் ஆக்டிவாக இருக்குமாம்.
அகச்சிவப்பு கதிர் ஆகாதே...
அதேசமயம், அகச்சிவப்பு கதிர்கள் அதாவது இன்பிரா ரெட்... கொசுக்களுக்கு எமன் போல.
இரவில் புற ஊதாக் கதிர் வீச்சு அதிகம்
அதிகாலை, அந்தி சாயும் நேரம், இரவு நேரங்களில் புற ஊதாக் கதிர் வீச்சு சற்று அதிகமாக இருக்கும். எனவேதான் இந்த சமயங்களில் கொசுக்கள் கூடிக் கும்மாளம் போடுகின்றனவாம்.
பகலில் அகச்சிவப்பு அதிகம்
பகல் நேரங்களில் அகச்சிவப்பு கதிர் வீச்சு அதிகம் இருக்கும். இதனால்தான் சூரிய உதயத்திற்குப் பின்னரும், பகலிலும், கொசுக்களைப் பார்க்க முடிவதில்லை.
காலைத்தான் குறி வைக்கும்
கொசுக்கள் பெரும்பாலும் காலைத்தான் குறி வைத்துக் கடிக்குமாம். அதேபோல கால், நெற்றியிலும் அவை அதிகம் விளையாடுமாம்.
இவன் சரியான நாத்தப் பய.. இவனை கடிப்போம்
அதேபோல ஒருவரது உடலின் வாசனையை வைத்தும் கொசுக்கள் குறி வைத்துக் கடிக்குமாம். குறிப்பாக மோசமான உடல் துர்நாற்றம் உடையவர்களை கொசுக்கள் அதிகம் கடிக்குமாம். அப்படிப்பட்டவர்களை 100 மீட்டர் தூரத்திலேயே அவை மோப்பம் பிடித்து விடுமாம். கொசுக்களின் ரகசியம்
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!