Friday, August 23, 2013

“சிங்கள அமைச்சர் என்ற முறையில், நான் தமிழர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரிடும்”

“சிங்கள அமைச்சர் என்ற முறையில், நான் தமிழர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரிடும்”


இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் இரு நாட்டு கடல் பகுதிகளிலும் மாறிமாறி மீன்பிடிக்க அனுமதிக்கும் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார். “இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்தால், சிங்கள அமைச்சர் என்ற முறையில், நான் தமிழர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரிடும்” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய, இலங்கை மீனவர்கள், தத்தமது நாட்டு கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிப்பதால் கைது செய்யப்படும் நிலை தற்போது உள்ளது. இதனைத் தவிர்க்க, இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் இரு நாடுகளின் கடல் எல்லைகளிலும், 70 நாட்கள் இங்கும், 70 நாட்கள் அங்குமாக மாறிமாறி மீன் பிடிக்க அனுமதிக்கலாம் என ஒரு திட்டத்துக்கு இரு நாட்டு மீனவர்கள் தரப்பில் உடன்பாடு ஏற்பட்டது.

ஆனால் இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ரஜித சேனாரத்ன, “இலங்கை கடல் பகுதியில், 70 நாட்களும், இந்திய கடல் பகுதியில், 70 நாட்களும், இரு நாட்டு மீனவர்களும், மீன் பிடிக்கும் திட்டத்துக்கு அனுமதி அளிக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் சேனாரத்ன கூறுகையில், “இரு நாட்டு கடல் எல்லைகளைத் தாண்டி இரு தரப்பு மீனவர்களும் மீன் பிடிக்கும் திட்டம் சர்வதேச கடல் எல்லை ஒப்பந்தத்தை மீறுவதாகும். கடந்த 30 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் கடலில் நடமாடியதால், இலங்கை மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. அவர்கள் சரியாக மீன் பிடிக்க முடியாமல் சிரமப்பட்டனர்.

தற்போது யுத்தம் முடிந்தபின் இலங்கை மீனவர்கள் எமது பகுதிகளில் மீன்பிடிக்க முடிகிறது. இப்படியான நிலையில், இந்திய மீனவர்களும் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதி அளித்தால், இந்திய மீனவர்கள் நம் கடல் வளத்தை சுரண்டி விடுவர். இதனால் இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுவர்.

இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்தால், சிங்கள அமைச்சர் என்ற முறையில், நான் தமிழர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரிடும்” என்றார்.


Join with us on Facebook  >>>

              அறிவியல்


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!