Friday, August 2, 2013

நாளை ஆடிப்பெருக்கு காவிரியில் கரைபுரளும் தண்ணீர்

நாளை ஆடிப்பெருக்கு காவிரியில் கரைபுரளும் தண்ணீர்




காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், ஆடிப்பெருக்கை கொண்டாட புதுமண தம்பதிகள் உற்சாகத்தில் உள்ளனர். தமிழகத்தில் நீர்நிலைகளில் குறிப்பாக காவிரி ஆற்றில் ஆடி 18 அன்று ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்படும். அன்றைய தினம் புதுமண தம்பதிகள் திருச்சி காவிரி ஆற்றுக்கு வந்து புனித நீராடி பூஜை செய்து, மஞ்சள் கயிற்றை அணிந்து கொள்வார்கள். திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விடுவார்கள். அதேபோல் திருமணமாகாத பெண்கள், நல்ல வரன் அமையவேண்டி, பூஜை செய்து மஞ்சள் கயிறு கட்டிக்கொள்வார்கள்.

இந்தாண்டு ஆடிப்பெருக்கு விழா நாளை (சனி) கொண்டாடப்பட உள்ளது. தற்போது திருச்சி காவிரி ஆற்றில் கரைபுரள தண்ணீர் ஓடுவதால், ஆடிப்பெருக்கு விழா களை கட்டி உள்ளது. புதுமண தம்பதிகள், பெண்கள் புனித நீராடுவதற்கு உற்சாகத்துடன் உள்ளனர். ஆடிப்பெருக்கு அன்று புதுமண தம்பதிகள் காவிரிக்கரையில் கூடி, தலைவாழை இலையில் மஞ்சள் கயிறு, பழவகைகள், சர்க்கரை பொங்கல்,

பஞ்சாமிர்தம் போன்ற நைவேத்தியங்கள், கருகமணி, தேங் காய், பால் ஆகியவற்றை வைத்து பூஜை செய்வார்கள். மேலும் மூத்த சுமங்கலி பெண்களின் காலில் விழுந்து ஆசி வாங்குவார்கள். ஆடி பெருக்கு அன்று திருச்சி காவிரி கரையில் உள்ள அம்மா மண்டபம், அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்புக்காக போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர்.


எக்ஸ்ட்ரா தகவல்

ஆடி என்றாலே புது தம்பதிகளுக்கு ஏக்கம்தான். ஒரு மாத பிரிவுக்கு ஒரே ஆறுதல் சந்தோஷம் இந்த ஆடிப் பெருக்கு விழாதான்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!