புற்றுநோயிலிருந்து முழுமையாக மீளலாம்... பிரிட்டன் விஞ்ஞானிகள் நம்பிக்கை
புற்றுநோய் தாக்கியவர்களை முழுவதுமாக குணப்படுத்தி அவர்களை காப்பாற்ற முடியும் என்று பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
புற்றுநோய் தாக்கியவர்களில் மீண்டவர்கள் ஒருசிலர்தான். ஆனால் புற்றுநோய் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றும் சில நோயின் தீவிரம் தாங்கமுடியாமல் மரணிக்கின்றனர். நோய் தாக்குதலை விட நோய் பற்றிய அச்சம்தான் பலரது மரணத்திற்கு காரணமாகிறது.
பிரிட்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் வார்த்தைகள் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
பிரிட்டன் சதாம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் புற்றுநோயை குணப்படுத்துவது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். அப்போது, eEF2K என்ற புரதமே புற்றுநோய் செல்லின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும், எனவே eEF2K புரதத்தின் வளர்ச்சியை தக்க மருந்துகள் மூலம் தடுப்பதனால்,
புற்றுநோய் செல்லின் வளர்ச்சியையும் முறியடித்துவிடலாம் எனவும் அவர்களை நம்பிக்கை தெரிவித்துள்ளனர். புற்றுநோய் செல்லின் வளர்ச்சி, உடலின் வளர்ச்சிக்கு உதவும் மற்ற செல்களின் வளர்ச்சியை காட்டிலும் அபரிமிதமாக இருக்கும். eEF2K புரதத்தில் உள்ள உள்ள ஒரு செல்லுலார் கூறுதான் கேன்சர் செல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆரோக்கியமான செல் பாதிக்கப்படாத அளவிற்கு eEF2K புரதத்திலுள்ள செல்லுலார் கூறின் வளர்ச்சியை தடுப்பதன் மூலம் புற்றுநோயிலிருந்து மனிதன் இறப்பதை தடுத்து விடலாம். எனவே தற்போது, eEF2K புரதத்தின் வளர்ச்சியை தடை செய்யும் மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான பல்வேறு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சிசிக்சை முறை இன்னும் 5 வருடத்திற்குள் நடைமுறைக்கு வந்துவிடும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!