பூமியை நெருங்கிக் கொண்டிருக்கும் 2.7 கி.மீ நீள விண்கல்!
சுமார் 2.7 கி.மீ நீளமுள்ள ஒரு விண்கல் (asteroid) பூமியை நெருங்கிக் கொண்டுள்ளது. இது வரும் மே 31ம் தேதி பூமியை மிக அருகே கடந்து செல்லப் போகிறது.
1998 QE2 என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த விண்கல் எங்கிருந்து வந்தது என்பதை உறுதி செய்ய முடியவில்லை.
பல சந்தேகங்கள்...
பெரும்பாலான விண்கற்கள் செவ்வாய் கிரகத்துக்கும் ஜூபிடர் கிரகத்துக்கும் இடையிலான asteroid belt எனப்படும் பகுதியில் தான் சுற்றி வருகின்றன. ஆனால், 1998ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளி மையத்தால் இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்டபோது, இது எங்கிருந்து வந்தது என்பதில் பல சந்தேகங்கள் எழுந்தன. இதன் மேல் பகுதி கருப்பு நிறத்தில், வளவளப்பான திரவம் படிந்த நிலையில் உள்ளது.உடைந்து சிதறிய வால் நட்சத்திரத்தின் ஒரு பகுதி...
இதனால் சூரியனுக்கு மிக அருகே சென்று உடைந்து சிதறிய வால் நட்சத்திரத்தின் ஒரு பகுதியாக இந்த விண்கல் இருக்கலாம் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாவின் ஜெட் புரபல்சல் லெபாரட்டரியின் ஆய்வாளரான ஆமி மெய்ன்ஸர் கூறியுள்ளார்.கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள US Minor Planet Center தான் இந்த விண்கல்லின் திசையை வேகத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
மே 31ம் தேதி இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு...
வரும மே 31ம் தேதி இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு இந்த விண்கல் பூமியிலிருந்து 5.8 மில்லியன் கி.மீ. தூரத்தில் கடந்து செல்லப் போகிறது. இது பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தூரத்தைப் போல 15 மடங்காகும். இது மிகப் பெரிய இடைவெளி மாதிரி தோன்றினாலும் அண்டசராரங்களோடு ஒப்பிடுகையில் ஒரு கல் எறி தூரம் தான்.டைனோசர்களை அழித்து ஒழித்த விண்கல் மாதிரியே...
இந்த அளவிலான ஒரு விண்கல் தான் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் மோதி மாபெரும் அழிவை ஏற்படுத்தி டைனோசர்களை அழித்து ஒழித்ததாகக் கருதப்படுகிறது.அதே நேரத்தில் இந்தமுறை இந்த விண்கல் பூமியை எட்டிப் பார்த்துவிட்டு சென்றுவிடப் போகிறது.
200 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வரும்....
இதே விண்கல் 200 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பூமிக்கு அருகே வருமாம்! இதற்கிடையே பூமிக்கு மிக அருகே வரும் விண்கற்களை விண்வெளியிலேயே எதிர்கொண்டு உடைக்கும் அல்லது திசை திருப்பும் திட்டத்தை தயாரித்து வருகின்றன நாஸாவும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஎஸ்ஏவும் (European Space Agency- ESA).Didymos .. போட்டுத் தள்ள திட்டம்...
இந்தத் திட்டத்தின் கீழ் முதன்முதலாக வரும் 2022ம் ஆண்டில் Didymos என்ற விண்கல்லை விண்வெளியில் சந்தித்து உடைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த விண்கல் 2022ம் ஆண்டில் பூமிக்கு 11 மில்லியன் கி.மீ. அருகே வரப் போகிறது. இது இரட்டை கற்களைக் கொண்ட விண்கல். 800 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு விண்கல்லும் அதை 150 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு விண்கல் பூமியை நிலா சுற்றி வருவது மாதிரி சுற்றிக் கொண்டிருக்கிறது.
நம்ம மேல விண்கற்களுக்கு எவ்வளவு பாசம்.. கூட்டம் கூட்டமா இங்கே வருதே.. !
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!