Wednesday, June 20, 2012

பாட்டு பாடும் கிப்பன் குரங்குகள்


ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சீனா, லாவோ, கம்போடியா மற்றும் வியட்நாம் போன்ற ஆசிய நாடுகளின் மழை காடுகளில் காணப்படும் கிப்பன் வகை குரங்குகள் பற்றி ஆய்வு மேற்கொண்டனர். பெரும்பாலும் மனிதனை ஒத்து காணப்படும் இந்த கிப்பன் குரங்குகள் தங்களுக்கென்று பாடல்கள் வைத்திருக்கின்றன. தனது இணையை கவரவும், எல்லைகளை பிறருக்கு தெரியபடுத்தவும், பிறரோடு தொடர்பு கொள்வதற்கும் என்று பல விசயங்களுக்கு பாடல்களை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளன. இதில் டூயட் பாடல்களும் அடங்கும்.

ஆய்வுக்கு 92 டூயட் பாடல்கள் உட்பட 400 பாடல் மாதிரிகளை சேகரித்தனர். பின்னர் அந்த பாடல்களை ஏறத்தாழ 53 வேறுபட்ட அலைவரிசைகளில் பிரித்து சோதனை செய்தனர். அதில் கம்போடியா, லாவோ மற்றும் வியட்நாம் ஆகிய பகுதிகளை சேர்ந்த கிப்பன்கள் ஒரே மாதிரியான டி.என்.ஏ. அமைப்பை கொண்டிருந்தது. மேலும் 4 ரகமான தனித்தன்மை வாய்ந்த பாடல்களை அவை பாடுவதும் தெரிய வந்தது. குறிப்பாக வடக்கு வியட்நாம், சீனா ஆகிய பகுதிகளை சேர்ந்த கிப்பன்கள், தெற்கு பகுதியை சேர்ந்த கிப்பன்களை காட்டிலும் பல வகைகளில் வேறுபட்டிருப்பது ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!