Tuesday, July 17, 2012


ஒலிம்பிக் சுடர் குறித்த அரிய தகவல்




ஒலிம்பிக் போட்டியில் மிக முக்கியமானது உலகம் முழுவதும் சுற்றிவரும் ஒலிம்பிக் சுடர் விளக்கு ஆகும்.
2012ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி லண்டனில் நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டிக்கான சுடர் விளக்கு கடந்த ஆண்டு யூன் 8ம் திகதி அறிமுகம் செய்யப்பட்டது.



* மரியாதை, திறமை, நட்புணர்வு என்ற ஒலிம்பிக் கோட்பாட்டை குறிக்கும் வகையில் இந்த விளக்கு 3 பக்கங்கள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

* தங்க நிறத்தில் ஜொலிக்கும் இந்த விளக்கின் உயரம் 800 மி.மீற்றர்., எடை 800 கிராம்.

* ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் 8000 பேர் இந்த விளக்கை ஏந்திச் செல்ல உள்ளதால், இதில் 8000 துளைகள் இருக்கும் வகையில் வடிவமைத்துள்ளனர்.



* இதனால் விளக்கின் உட்புறத்தை தெளிவாகப் பார்க்க முடிவதுடன், சுடரின் வெப்பம் ஏந்திச் செல்பவரின் கைகளை பாதிக்காமல் குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவுகிறது.

* இங்கிலாந்தை சேர்ந்த பிரபல வடிவமைப்பாளர்கள் எட்வர்ட் பார்பர், ஜே. ஆஸ்ஜர்பி இணைந்து இதை உருவாக்கியுள்ளனர்.

* இங்கிலாந்து முழுவதும் 8,000 மைல் தூரத்துக்கு சுடர் ஓட்டம் நடைபெறுகிறது.









No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!