Thursday, July 19, 2012


இத்தாலியில் மோனாலிசாவின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு




உலகப் புகழ் பெற்ற மோனாலிசா ஓவியத்தினை வரைவதற்கு மொடலாக இருந்த லிஸா கிரார்தினியின் எலும்புக் கூடுகளை கண்டுபிடித்துள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.



டாவின்சி மோனாலிசா ஓவியத்தை வரைவதற்கு தூண்டுகோலாக இருந்தவர் தான் லிஸா கிரார்தினி.

இந்த பெண் தொடர்பாக அவ்வப்போது பல தகவல்கள் வெளிவந்தாலும், அவற்றில் சில தகவல்கள் மட்டுமே உண்மையானவை.

இந்நிலையில் இத்தாலிய தொல்பொருள் ஆய்வாளர்கள், புளொரொன்சில் உள்ள புனித உர்சுலா மடமொன்றில் லிஸா கிரார்தினியின் எலும்புக் கூடுகளை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மோனாலிசா இத்தாலியில் லா கியோகொண்டா என அறியப்படுகின்றது.

நவீன வராலாற்று ஆசிரியர்களும் மோனாலிசா படத்திற்கு மொடலாக இருந்தவர் லிசா டெல் கியோகொண்டா என ஏற்கொண்டுள்ளனர்.

வரலாற்றுக் குறிப்புகளின் படி, அப்பெண் தனது கணவர் இறந்ததற்கு பின்பு துறவியாக மாறியதாகவும், அவர் மரணமடைந்த பின்னர் அம் மடத்திலேயே புதைக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் கடந்தாண்டு கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓட்டுடன், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் ஒத்துப் போகின்றதா என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.




இவரது எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் மேலும் இரண்டு எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்விரண்டு எலும்புக்கூடுகளும் அவரது பிள்ளைகளின் எலும்புக் கூடுகளாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.




லிசா டெல் கியோகொண்டாவின் எலும்புக் கூடும் மற்றைய இரண்டு எலும்புக்கூடுகளும் ஒத்துப்போகின்றனவா எனப் பரிசோதனை செய்யப்படவுள்ளது.

இதன் பின்னர் அவரது மண்டையோட்டினை வைத்து நவீன தொழில்நுட்பங்களின் மூலம் அவரது முகம் எவ்வாறு இருந்தது என்பதனை உருவகப்படுத்த முடியுமென ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இவற்றையடுத்து மோனாலிசாவின் மர்மப் புன்னகைக்கும் விடைகிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.






No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!